Tuesday, 15 October 2013

-'''நந்தி''';;---நந்தி பெருமானுக்குப் பிடித்த மாலை பாமாலைதான், அவர்களுக்கு பிடித்த அபிஷேகம் கண்ணீர்மாலைதான், அவர்கள் னம் மேல் வைக்கும் அன்பு னமது ஒழுக்கத்திற்கும், னடத்தைக்குந்தான்., '''அறிவை அறிந்தவர் ஆயிரத்தில்ஒன்று,. அருளை அறிந்தவர் லட்சத்தில் ஒன்று,. குருவை அறிந்தவர் கோடியில் ஒன்று,. கருவை அறிந்தவர் காண்ப தரிது..'' பதியாக,குருவாக,நந்தியாக வந்து சர்வத்திற்கு மூலம் ஆதியிலே உண்டான சைவம்தான், அதன் மூலமந்திரம் ''பஞ்சாட்சரம்'' , அதற்குஅதிபதி ''நந்தி'' பெருமான் தான்,. --''பிறவா நெறிதந்தபேரரு ளாளன், மறவா அருள்தந்த மாதவன் நந்தி, அறவாழி அந்தணன் ஆதிப்பராபரன், உறவாகி வந்தென் உளம் புகுந்தானே'' ----திருமந்திரம் 1803.

Saturday, 12 October 2013

'''சாவது மில்லையடி அகப்பேய், சைவ மானதடி அகப்பேய், தானாய்னின்றதடி அகப்பேய், சைவ மில்லையாகில் சலம்வரும் கண்டாயே,உன் மேல் ஆணையிட்டு உறுதியாகச் சொல்கிறேன்''' ---- '''அகப்பேய்ச்சித்தர் பெருமான்''' ---236 .

'''நாறா திருந்திடும் பால்கற, நெடுனாளு மிருந்திடப் பால்கற, சாவாதிருந்திடப் பால்கற, அழிவில்லாதது ஆதியென்று தும்பீபற, சாகாதிருப்பதற்கு...மெய்க்கல்வி.. ----- இடைக்காட்டுசித்தர் பெருமான்...

''தெய்வம்''' ---- சர்வபடைப்புகளிலும் உன்னதமானவன் ''மனிதன்',' அவனைவிட உன்னதமானது அறிவு., அந்த அறிவு மனிதன் சட்டை தாங்ஙி வரும் போது அதுவே '''தெய்வம்'''.,--அதன்வல்லபம்-- இறுதியில் எமனிடம் சிக்கி சாகாமல், பரிசுத்த முத்தி தேகத்தில் புகுத்தாட்டி வைக்கும், ஈசனுடைய சக்தியைச் செயலாக்க மனிததேகம் ஏற்றுவந்து, நாசிக்கு வெளியே மூச்சோடாத தவ வல்லபத்தில் ஊண்உறக்கமற்ற னிலையில் உலகில் ஒப்பற்று விளங்குபவர்களே மெய்யான ''தெய்வம்'''---மெ.ஆ.தி...

Thursday, 10 October 2013

''''சாகாமற் சத்திருக்கும் சத்குருவின் குணங்ஙுடியைச் சார்ந்தோமாகிற்,, சாகாமற் சத்திருக்குஞ் சாயுச்ய பதந்தரும் --சாட்சாதியாக்கும்'' ---- குணங்ஙுடியார் பெருமான் ---

''அருளாகா திந்நூலைப் பழித்த பேர்கள்,. அருனரகிற் பிசாசெனவே அடைந்து வாழ்வார்,, அருளாக ஆராய்ந்து பார்க்கும் பேர்கள்,, ஆகாயம் னின்றனிலை அரியலாமே''--- அகஸ்தியர் ஞானம் --379..

''ஆணவத்தால் வருங்கேடு அதை அறியாமல் னடப்பது, சுனைகெட்டமாடு, தாணுவின் பாதத்தை னாடு என்றும் தன்தேகம் போகாமல் கற்பங்ஙள்தேடு'' ---- கல்லுளிச்சித்தர் பெருமான் --524 ....

'''அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது , அதிலும் கூன்குருடு செவிடு பேடுனீங்ஙிப் பிறத்தலரிது, இனி பிறவாதிருக்க வரம் வேண்டும், பிறந்துவிட்டால் உனை மறவாதிருக்க வரம்வேண்டும்" ---- ஔவை பிராட்டி பெருந்தகை --..

''செத்திடமும் பிறந்திடமும் இனிசாகாதிருந்திடமும் அத்தனையும் அறியாதோர் அறியும் அறிவு எவ்வறிவோ!!! ---- காணிக்கைனிதி மாணிக்கவாசகபெருமான்....

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்,, உடம்பினுக் குள்ளே யுறுபொருள் ''கண்டேன்'' ., உடம்புளே உத்தமன் கோயில் கொண்டா ரென்று ,, உடம்பினை யானின்று ஓம்புகின்றேனே!!! __ திருமூலர் பெருமான் அவர்கள் ....

புத்தியடா பிரம்மத்திற் புகுந்து கொண்டால், பூலோகமெல்லாந்தான் பணியும் உன்னை!!! - -- காகபுசுண்டர் ஞானம் ---80,--461...

"வம்மின் உலகியலீர்! மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்! புனைந்துரையேன்! பொய்புகலேன்! சத்தியம் சொல்கின்றேன்! பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே! அழிவுடலை அழியாமை ஆக்கும்வகை அறிவீர்!!! - வடலூர் வள்ளல் பெருமான் அவர்கள்..